Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை

    லங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். 
   இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ள ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் மேலும் 30 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை தமிழகத்திலுள்ள மீனவர்களை கலக்கமடையச் செய்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
   மீனவர்களின் வாழ்வாதாரத்தை அண்டை நாடு ஒன்று அழித்துவருவதை எந்த அரசும் வாய்மூடி பார்த்துக் கொண்டிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
   மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதும் தாக்குவதும், மீனவ சமுதாயத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்துவதோடு இரு நாடுகளிடையே பதட்டத்தையும் உருவாக்கும் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
   தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை, இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் கோபமூட்டும் நடவடிக்கையாகவே கருதவேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
   எனவே இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 54 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமரை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
   மீனவர்களை கைது செய்வதும் தாக்குவதும் இனி நிகழாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING