Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள்- விரைவில உணவுப் பஞ்சம் ஏற்படும்



     பொய்த்துப் போன பருவமழை, வாட்டும் வறட்சி, மிரட்டும் விலை உயர்வு, வன விலங்குகள் பாதிப்பு போன்ற காரணங்களினால் விரக்தியடைந்துள்ள விவசாயிகள் படிப்படியாக விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக விளைநிலங்களின் பரப்பளவும் குறைந்து வருவதால், விரைவில உணவுப் பஞ்சம் ஏற்படும் ஆபத்துள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.

 
       ச்சைப்பசேல் வயல்வெளி... விளைந்துக் கிடக்கும் கரும்புத் தோட்டம்... ஓங்கி உயர்ந்த மரங்களை கொண்ட தோப்புகள்..... இவை எல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு என்பதுதான் விவசாயிகளின் ஏக்கம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடரும் வறட்சி காரணமாக, விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக, ஒரு காலத்தில் சோலைவனமாக காட்சியளித்த விளை நிலங்கள் எல்லாம் தற்போது, நில வணிகர்களிடம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.


                       வறட்சி போன்ற இயற்கை ஏமாற்றங்களை தாண்டி, விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலையோ இன்னும் பரிதாபமாக இருக்கிறது. உரம் மற்றும் பூச்சி மருந்துகளின் விலை ஒருபக்கம் மிரள வைக்க, வனவிலஙகுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை குலைத்துவிடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதவிர, மத்திய, மாநில அரசுகளின்  கொள்கைகளும் வேளாண்மையை வெகுவாக பாதிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
            இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பருவமழை பொய்த்ததே, விளை நிலங்களின் பரப்பு குறைய முக்கியக் காரணம் என்றனர். எனினும், சாகுபடி பரப்பு குறைந்தாலும் உற்பத்தி குறையவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING