Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ஆந்திராவில் வெயிலின் தாக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 524-ஆக உயர்வு


     ந்திராவில் வெப்பத்தின் தாக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளதாக, அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நீடித்து வரும் வெயிலின் கடுமை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நேற்று வரை கடலோர மாவட்டமான குண்டூரில் அதிகபட்சமாக 95 பேர் வெயிலின் கடுமையை தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளனர். இதேபோல் பிரகாசம் மாவட்டத்தில் 75 பேரும், கிழக்கு கோதாவரியில் 60 பேரும், நல்கொண்டா மாவட்டத்தில் 47 பேரும், அதிலாபாத் மற்றும் கரீம் நகர் மாவட்டத்தில் தலா 43 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள்.
    வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. எனினும், இதனைப் பெறுவதற்கு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பிரேதப் பரிசோதனை மற்றும் முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
   அடுத்த சில நாட்களுக்கு கடலோர மாவட்டங்களான குண்டூர், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினத்தில் கடுமையான வெயில் காணப்படும் எனவும், வாரங்கல், கரீம் நகர் மற்றும் தெலுங்கானாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனல் காற்று வீசக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING