Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

       12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை நடத்துகிறது.
பள்ளிக் கல்வி தொடங்கி உயர்க்கல்வி வரை... தனியார் துறை தொடங்கி அரசு வேலை வாய்ப்புகள் வரை... பல தகவல்களை உடனுக்குடன் வெளியிட்டு, கற்க கசடற நிகழ்ச்சியின் மூலம் புதிய தலைமுறை அமைக்கும் புதிய மேடை கல்வி கடலின் கலங்கரை விளக்கம்.
கிராமப்புற மாணவர்களுக்காக..
இது வரை மாநகர மாணவர்களின் கரங்களுக்கு மட்டுமே எட்டிய கல்வி வாய்ப்புகள் இனி கிராமப்புற மக்களுக்கும் புதிய விடியலை தரும் வகையில் புதிய தலைமுறை அமைக்கும் உயர்க்கல்விக்கான பிரம்மாண்ட தளம், மாணவர்களை சரியான பாதையில் செல்வதற்கு வழிகாட்டுகிறது.
குறிப்பாக, 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து விளக்குவது, மருத்துவம், பொறியியல் என பெரும்பான்மை மாணவர்களின் லட்சிய வேட்கைக்கு வழிகாட்டுவதோடு, கலை, அறிவியல், சட்டம் போன்ற மாற்று துறைகளில் உள்ள வாய்ப்புகளையும் சுட்டிக் காட்டுவது இந்த நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளாக விளங்குகிறது.
"கடையனும் கடைத்தேற" என்ற வாக்கிற்கேற்ப, மாநகர மாணவர்களுக்கு மட்டுமே எட்டிய பல படிப்புகளை கிராமப்புற மாணவர்களும் படித்தேற உதவும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், 6 சிறு நகரங்களில் தலா 3 நாட்கள் நடைபெறவுள்ள கல்விக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தில் இடையில் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் என ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் கல்வி குறித்த கருத்தரங்கு நடைபெறும்.
கற்க கசடற நிகழ்ச்சியில் விளக்கம்
கருத்தரங்கில் துறைசார்ந்த வல்லுநர்கள் பொறியியல், மருத்துவம் என துறைவாரியாக உரையாற்றுவார்கள் - வல்லுநர்களிடம் மாணவர்கள் கேள்விகள் கேட்டு விளக்கம் பெறவும் வாய்ப்பளிக்கப்படும்.
கற்க கசடற நிகழ்ச்சி நேரமான மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை கருத்தரங்க மையத்தில் இருந்து மாணவர்கள், சென்னை செய்தி அரங்கத்தில் உள்ள வல்லுநர்களிடம் கேள்விகள் கேட்க வாய்ப்பளிக்கப்படும்.
நிகழ்ச்சியில் இடம்பெறக்கூடிய அரங்கங்களில் கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகள் குறித்த விளக்கங்களை அந்தந்த கல்வி நிறுவனங்களே மாணவர்களுக்கு நேரடியாக வழங்கும்.
கடந்த 8ந்தேதி கும்பகோணத்தில் தொடங்கிய இந்த கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இதேப்போன்று, சேலம் , திண்டுக்கல் , செங்கல்பட்டு , திருநெல்வேலி , விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெறுகின்றன. இதுக்குறித்த தகவல்கள் கீழ்காணும் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING