Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை."

  


   தாவது, உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழும் விவசாயிகளுக்கு வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப வாழ்வுரிமை இருக்கிறதா என்றால் பதிலாக மிஞ்சுவது மிகப்பெரிய கேள்விக்குறி மட்டும் தான்.
   விவசாயிகளின் வாழ்வில் கண்ணீருக்கு பஞ்சமில்லை, தண்ணீருக்குத் தான் பஞ்சம். கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் எண்ணிக்கை 1 கோடி குறைந்துள்ளது என்கிறது ஒரு புள்ளி விபரம். பருவமழை பொய்த்ததும், காவிரி நீர் கிடைக்காமல் போனதும் போதாது என்பது போல் விவசாயிகளை அச்சுறுத்த கிளம்பியுள்ளது ஒரு புதிய பூதம். அது தான் காவிரிப் படுகையில் இருந்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம்.
          விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?!

    காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பதற்கான காரணம் என்ன? உற்று நோக்கினால் புரியும் உறைய வைக்கும் உண்மை .
  காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு நிலக்கரி படிமம் இருப்பது கண்டறியப்பட்டது. இது தான் இந்த வேதனை அத்தியாயம் தொடங்க ஆரம்பப் புள்ளி. புதுச்ரேி மாநிலம் பாகூரில் இருந்து நெய்வேலி, ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடி வரை நிலத்தடியில் செழுமையான பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2010ம் ஆண்டு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் மத்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. 
அதே ஆண்டு, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகைகளுக்கு இடையே உள்ள மீத்தேன் வாயுவை சோதனைக் கிணறுகள் அமைத்து தேடுதல் மற்றும் வணிக ரீதியான அதன் உபயோகம் பற்றி ஆய்வு நடத்துவதற்காக கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உரிமம் வழங்கியது. 2011ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் போட்டது. இதன் படி முதற்கட்டமாக தஞ்சாவூரில் 12 உள்ளுறை கிணறுகளும், திருவாரூரில் 38 உள்ளுறை கிணறுகளும் அமைக்க இந்நிறுவனம் முடிவு செய்தது. 
            ராட்சத போர்வெல்கள்....

    நிலத்துக்குக் கீழேயுள்ள நீரின் அழுத்தம் காரணமாக இந்த மீத்தேன் வாயு அதே இடத்தில் நிலையாக உள்ளது. ஆகவே, மேலே அழுத்திக் கொண்டிருக்கும் நீரை வெளியேற்றினால் மட்டுமே, மீத்தேன் வாயுவை வெளியில் கொண்டு வர இயலும். இவ்வாறு நிலத்தடி நீரை வெளியேற்றுவதால் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் உரிஞ்சப்படுவேதாடு மட்டுமல்லாமல் மீத்தேன் எடுக்க வெளியேற்றப்படும் நீரில் கடல் நீரை விட 5%அதிகஅளவில் உப்பு இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சோடியம், சல்பேட், குளோரைட், தவிர கதிரியக்கமும் ஏற்படும் என அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
     இந்தத்திட்டம் செயல்பட்டால் வங்கக்கடல் உப்புநீர் காவிரிப்படுகையில் ஊடுருவும். காவிரிப்படுகை உப்பளமாக மாறும். எதிர்கால சந்ததியினரை இந்தப் பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு பேரியியக்கமாக விவசாயிகள் ஒன்று திரண்டுள்ளனர். 
    இதே கோரிகையை முன்வைத்து தான், பேரழிவிற்கு எதிரான பேரியிக்கம் என்ற பெயரில் மன்னார்குடியில் இயற்றை வேளாண் விவசாயி நம்மாழ்வார் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் விவசாயிகள். 
    மீத்தேன் வாயு பிரச்னையை தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட மக்களின் பிரச்னை என்று பார்க்காமல் இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்னையாக பார்க்க வேண்டும். மீத்தேன் வாயு எடுப்பதற்காக நிலத்தடி நீர் உரிஞ்சப்பட்டு ஒரு கட்டத்தில் இப்பகுதி வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறி விடும். மத்திய அரசு மக்கள் நலனை ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப் நிறுவனத்திடம் அடகு வைத்துள்ளது.
    விவசாயிகளின் நலனை முன்னிலைப்படுத்தி மத்திய அரசு இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும். அதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என போராட்டக் களத்தில் பேசிய நம்மாழ்வார் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து புதியதலைமுறை தொலைக்காட்சி இணையதளத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம் அளித்த பேட்டியில்:
     காவிரிப் படுகையில் இருந்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார். மீத்தேன் எரிவாயு எடுக்கப்படுவதைக் கண்டித்து இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வார் நடத்தும் போராட்டத்திற்கு தான் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். 
     மீத்தேன் எரிவாயு கார்பன் டை ஆக்சைடு வாயுவை விட பல மடங்கு நச்சுத் தன்மை உடையது. இந்த வாயுவை வெளியேற்றும் போது ஆர்சனிக் கன உலோகம் வெளியே கசியும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் புற்றுநோய் உள்பட பல கொடுமயைான நோய்கள் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தத் திட்டம் கைவிடப் பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    மத்திய அரசு, விவசாயத்திற்கோ, விவசாயிகளுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனாலேயே இன்று விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக வருத்தமும் தெரிவித்தார் நித்யானந்த் ஜெயராமன். 
    எத்தகைய திட்டங்களும் சுற்றுச்சூழலுக்கும் இயற்கைக்கும், வாழும் மற்றும் வாழவிருக்கும் வருங்கால சந்ததிக்கும் பாதிப்பு ஏற்படாமல் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுதான் சுற்றுச்சூழல் வல்லுனர்களின் கோரிக்கை. அந்த வகையில் சமீபத்தில் விளைநிலங்களுக்கு கீழ் எரிவாயுக் குழாய் அமைக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டம் அரசின் தலையீட்டால் கைவிடப்பட்டது. அதே போல மீத்தேன் திட்டமும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்கின்றனர் தமிழக விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING