Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

மழை நீர் வீணாகிறதா ?


             நமக்கு கிடைக்கும் அனைத்து நீருக்கும் மழையே ஆதாரம்.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைவருக்கும் போதுமான, பாதுகாப்பான தண்ணீர் கிடைப்பது என்பது சவாலான விஷயமாகத்தான் இருக்கிறது. பூமியின் நீர் வளத்தைப் பெருக்க மழைநீரை சேமிக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவரசமும் கூட.
    ஒரு நாளைக்கு 1000 பேருக்கு மேல் நிரந்தரமாக சென்னையில் குடியேறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி ,வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக குடியேறும் மக்களால் ஆண்டுக்கு ஆண்டு நகரின் குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது.
      கடந்த 2003 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட கடும் குடிநீர் பஞ்சத்தை அடுத்து வீடு ,அரசு மற்றும் தனியார் கட்டங்கள் அனைத்திலும் கட்டாய மழை நீர் சேகரிப்பு என்ற அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு.புதிதாக கட்டப்படும் வீடு மற்றும் தனியார் நிறுவனங்களின் வரைபடத்திலேயே கட்டாயம் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு இருக்க வேண்டும். இந்தக் கட்டமைப்பு கட்டி முடிக்கப்பட்ட பின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பெருநகர வளர்ச்சிக்குழுமமோ அல்லது மாநகராட்சியோ அந்தக் கட்டடத்திற்கு அனுமதி வழங்கும்.குடிநீர் இணைப்பும் கிடைக்கும்.
    அரசின் இந்த உத்தரவால் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தால் சென்னையில் 90 சதவிகித கட்டடங்களில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
    இருப்பினும் சட்டம் போடப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டாலும் கூட சென்னையில் இன்னும் 10 சதவிகித கட்டடங்களில் அதாவது 2350 க்கும் மேற்பட்ட கட்டடங்களில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்கப்படவில்லை. இவற்றை கண்காணிக்க சென்னை குடிநீர் வாரியத்தில் தனிப்பிரிவு இயங்கினாலும் விதிகளை மீறி ஒரு சிலர் நடக்கத்தான் செய்கின்றனர்.
    2400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு கட்டடத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டால் ,ஆண்டுக்கு 1.40 லட்சம் லிட்டர் தண்ணீரை சேகரிக்க முடியும்.
ஆனால் மழைநீர் முறையாக சேகரிக்கப்படுகிறதா? இல்லை வீணாக்கப்படுகிறதா?.... தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த புதிய தலைமுறையின் செய்தி தொகுப்பு....

மழைநீர் சேகரிப்பு சென்னையில் எந்த அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது?


மழை நீர் சேகரிப்பு திட்டத்தால் கடந்த 10 ஆண்டுகளில் நிலத்தடி நீர் உயர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் உப்பு தண்ணீரின் அளவும் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும் 10 சதவீத கட்டடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை நீலாங்கரை பகுதியில் 20% அளவிற்கே மழைநீர் சேகரிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தியதால் நிலத்தடி நீர் அதிகமாக உயர்ந்திருக்கிறது என்றும் உப்பு நீர் தன்மையும் குறைந்திருக்கிறது என்றும், நிலத்தடி நீரின்
அசுத்தமும் கனிசமாக குறைந்து தரம் உயர்ந்திருக்கிறது என்றும் இப்பகுதியில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டங்கள் போட்டு திட்டத்தை செயல்படுத்துவதோடு, இதன் மூலம் ஏற்படும் நன்மைகளை மக்கள் உணர வேண்டும். அப்போது தான் இத்திட்டம் முழுமையாக செயல்படும் என்று இத்திட்டத்தினை தங்கள் வீடுகளின் அமல்படுத்தியுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் மாவட்டங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் நிலை...


மதுரையில் அரசு அலுவலகங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தாலும், அவை முழுமையாக செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக மதுரை மாநகராட்சியினர் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் ஜரூராக நடந்து வருகிறது. இன்னும் 60 நாட்களுக்கு இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தவிர புதிய வீடுகள் கட்டுபவர்கள் கட்டாயமாக மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரை தவிர விருதுநகர் மாவட்டத்தில் 2003ம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட போது சிறப்பாக அமல் படுத்தி விருது பெற்றது, ஆனால் இப்போது விருதுநகரில் இத்திட்டம் பெயரளவில் தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது.தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறுகிறது ஆனால் செயல் ஆக்கம் ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.
தென் மாவட்டங்களின் நிலை இப்படி இருக்க, திருநெல்வேலியில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் புதிதாக கட்டப்பட இருக்கும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களிடமும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING