Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

சிபிஐ- புலனாய்வு அமைப்பால் தேடப்படும் அலெக்ஸ் ஜோசப்.


        வி.ஐ.பிக்களுக்கு சொகுசு கார்களை இறக்குமதி செய்து கொடுத்தவர், சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி வருவாய் இழப்பிற்கு காரணகர்த்தா என்ற குற்றச்சாட்டுகளுடன் சிபிஐ- புலனாய்வு அமைப்பால் தேடப்பட்டுவரும் நபர் அலெக்ஸ் ஜோசப்.
    சிபிஐ  அவரைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில், கார் இறக்குமதி செய்ததில் 500 கோடி ரூபாய் வரிவருவாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள அலெக்ஸ் ஜோசப் யார் ? அவரது பின்னணி என்ன ? அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி அவர் என்ன கூறுகிறார் என்றறிய முயற்சி மேற்கொண்டனர் புதிய தலைமுறையின் புலனாய்வு செய்திக் குழுவினர்.
    நீண்ட நெடிய பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அலெக்ஸ் ஜோசப்பை நெருங்கியது நமது புலனாய்வு செய்திக் குழு. அவரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட முயற்சிகள் கிட்டத்தட்ட திரில்லர் தொடர்போலவே இருந்ததாகக்கூறுகின்றனர் நமது புலனாய்வுச் செய்தியாளர் குழுவினர்.
     அவர்தான் இவரா ? இவர்தான் அவரா என்ற அடையாளக்கண்டு பிடிப்புகளே பெரும் சவாலாக இருந்த நிலையில் பலகட்ட முயற்சிகள், அலைச்சல்கள் மேற்கொண்டு  அலெக்சை இறுதியில் சந்தித்தது நமது குழு. கொச்சியில் அவரை தனி இடம் ஒன்றில் சில மணித்துளிகள் மட்டுமே சந்தித்தனர் நமது குழுவினர்.
அலெக்ஸ் ஜோசப்.....
சிபிஐ- புலனாய்வு அமைப்பால் தேடப்பட்டுவரும் நபர் அலெக்ஸ் ஜோசப்.

     வெள்ளை நிற உடை, கருப்புக் கலர் கண் கண்ணாடி, கைகளில் விதவிதமான பல செல்போன்கள் என படு வித்தியாசமான தோற்றத்தில் இருந்த அலெக்ஸ் ஜோசப்பிடம்  கேள்விக்கணைகளைத் தொடுத்தது புதியதலைமுறையின் செய்திக்குழு.
     அனைத்துக் கேள்விகளையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அலெக்ஸ் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுத்தார். அதே சமயம் அலெக்ஸ் ஜோசப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இருப்பதாக சி.பி.ஐ.அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
     வரிவருவாய் மோசடியில் அலெக்ஸ் மட்டுமே குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை அவருக்கு உதவியதாக சுங்கத்துறை, மத்திய வருவாய்ப் புலனாய்வுத்துறை ஆகிய அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    தோற்றத்தில் படுபந்தாவாக தற்போது காட்சி அளிக்கும் அலெக்ஸ் ஜோசப்பை சிபிஐ புலனாய்வுக் குழுவின்  வளையத்திற்குள் கொண்டுவந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே இந்த தேடப்படும் நபருக்குப் பின்னணியில் இருக்கும் உண்மைக்கதைகள் வெளி உலகிற்குத் தெரியும்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING