Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

சாதியுமில்லை, சமூகமுமில்லை

டாக்டர்.தங்கராஜ்-Dr.Prof Thangaraj

      தொன்மையான இந்தியாவில் மிகப்பழமையான இரண்டு மக்கள் குழுக்கள் இருந்தனர் என்றும் அந்தக் குழுக்கள் கடந்த 1900 ஆண்டு முதல் 4200 ஆண்டுகள் காலகட்டத்தில்தான் ஒன்று கலந்திருக்கின்றனர் என்றும் மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது.
    அதுவரை தற்போதுள்ள சாதிய, சமூக முறைகள் இருந்திருக்கவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் அமெரிக்க ஹார்வர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பின் முடிவை தற்போது ஆதாரபூர்வமாக நிரூபித்து உள்ளனர்.
  இவர்களது இந்த கண்டுபிடிப்பு உலகின் தலைசிறந்த ஆராய்ச்சி இதழ் எனப் புகழப்படும் American Journal of Human Genetics, 2013 ஆகஸ்ட் 8 தேதியிட்ட இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதே விஞ்ஞானிகள் கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவில் இருந்த மக்கள் குழு முறை பற்றிய வெளிப்படையான ஆய்வு முடிவு ஒன்றை அறிவித்திருந்தனர். அந்த ஆய்வு முடிவின்படி, இந்தியாவில் இரண்டே இரண்டு பெரிய பழமையான மக்கள் குழு இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
  அதில் ஒன்று ஆதி தென்னிந்தியர்கள் மற்றொரு குழு ஆதி வட இந்தியர்கள். இதில் ஆதி தென்னிந்தியர்களின் மரபணுக்கள் அந்தமானில் உள்ள பழங்குடியினரின் மரபணுக்களோடு சற்று பொருந்தி இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
(இந்த அந்தமானியர்கள் தென்ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் தோன்றிய மனித குலத்தின் குழுவில் இருந்து அந்தமானுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என்பது மற்றொரு கண்டுபிடிப்பு).
  ஆதி வடஇந்தியர்களின் மரபணுக்கள் மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய மக்கள் குழுவினருடன் நெருக்கமாக உள்ளது என்றும் விஞ்ஞானிகள் குழு கடந்த 2009 ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவித்தது.
  எனவே, தென்னிந்தியர்களின் பூர்வீகம் தற்போதைய அந்தமான் பழங்குடியினரின் பூர்விகமான தென் ஆப்பிரிக்கா எனவும், வட இந்தியர்களின் பூர்வீகம் மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இருந்தும் உருவாகியிருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் வாதம்.
  எனினும் கூட இந்தியாவில் இருந்த இந்த இரண்டு மக்கள் குழுவின் மூதாதையர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் கலந்திருக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் ஊகித்திருந்தனர்.
  அப்படியானால், இந்த இரண்டு குழுக்களும் எப்போது கலந்தனர் என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ள ஹைதராபாத்தில் உள்ள உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் அமெரிக்க ஹார்வர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
  இதற்கென இந்தியா முழுவதிலும் இருந்தும் வெவ்வேறு மொழி மற்றும் சாதி அமைப்புகளின் பிரதிநிதியாக 73 மக்கள் குழுக்களைத் தேர்வு செய்து அவர்களின் 10 லட்சம் மரபியல் மாற்றங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இவ்விரு மூதாதயக் குழுக்களும் சுமார் 1900 ஆண்டுகளில் இருந்து 4200 ஆண்டுகள் காலகட்டங்களில் படிப்படியாக கலந்திருக்கவேண்டும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
  இதுபற்றி தெரிவித்துள்ள இவ்விஞ்ஞானிகள் குழுவைச் சேர்ந்த டாக்டர். தங்கராஜ், இவ்வாறு இரு மக்கள் குழு முழுவதும் ஒன்று கலக்காத காலகட்டங்களில் தற்போது உள்ள சாதிய முறைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
  இந்த 1900-த்தில் இருந்து 4200 ஆண்டுகள் காலகட்டத்திற்கு பிறகு இவர்கள் பல்வேறு மக்கள் குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு குழுவும் தங்களுக்கான திருமணம் மற்றும் சமூக வரைமுறைகளை வகுத்து அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் நடைமுறைகளைப் பின்பற்றியிருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இதே காலகட்டத்தில் அல்லது இதற்கு பின்பு உருவாக்கப்பட்ட சாதிய வரைமுறைகள் அந்ததந்த சாதிய குழுக்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் நடைமுறையை மேலும் வலுப்படுத்தியிருக்கக்கூடும் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்து.
  அவ்வாறு அந்தந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால் அந்த குழுக்களுக்கே உரித்தான மரபியல் ரீதியான நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
   ஏன் எனில் ஒவ்வொரு குழுவும் அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால் அக்குழுவில் ஏற்படும் நோயை உருவாக்கக்கூடிய திடீர் மரபியல் மாற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகவும், அதைத் தொடர்ந்து மரபியல் ரீதியான நோய்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக உள்ளது என்றும் டாக்டர்.தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
- பாரதி மற்றும் விஸ்வநாத் &
-பசுமைநாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING