Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

தனி மனித சுதந்திரமே சுதந்திரத்தின் அடையாளம் சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா


       நாட்டின் 67 வது சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டைார்.
   கொடி ஏற்றிய பிறகு சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா: சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தியாகிகளுக்கும் வீர வணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார். தனிமனித சுதந்திரமே சுதந்திரத்தின் அடையாளம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது என்று பெருமிதம் தெரிவித்தார்.
   தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் : மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்கள் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டினார். தமிழக அரசின் நலத்திட்டங்கள் பலவற்றை பட்டியலிட்டார்.
   தமிழகத்தில் அனைவருக்குமான பொது வினியோகத்திட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் கொண்டு வர தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். கச்சத்தீவில் தமிழகத்திற்கு உள்ள உரிமை நிலைநாட்டப்படும் என்றார்.
   நிறைவாக, "தமிழகமே எனது குடும்பம், தமிழ்நாட்டு மக்களே என் பிள்ளைகள், தமிழக மக்களின் நலனே என் நலன் "என்று முதல்வர் தெரிவித்தார்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING