Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

இத்தகைய ஒரு நாட்டில் குடிமக்களாக வாழ்வதற்குப் பெருமைப் படுவோம்!....



தமது மொழி உயர்ந்தது! மற்ற மாநில மொழிகள் தாழ்ந்தவை!
தனது இனம் உயர்ந்தது! மற்ற இனங்கள் தாழ்ந்தவை!

       தங்களுக்கு மற்ற மாநிலங்கள் துரோகம் செய்கின்றன! ஆனால் தாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை!
தம் மாநில மக்கள் அனைவரும் நல்லவர்கள்! மற்ற மாநில மக்கள் அனைவரும் கெட்டவர்கள்!
இப்படிப்பட்ட எண்ணங்கள் ஒவ்வொரு மாநில மக்கள் மனதிலும் வளர்க்கப்படுகிறது!


 ஆனால் அனைத்து மாநிலங்களிலும் லஞ்சம்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது!

             கிரிமினல்கள்தான் மக்களின் சுகதுக்கங்களைத் தீர்மானிக்கிறார்கள்!
கிரிமினல்களிடம் இருந்து எந்தத் துறையும் மக்களைக் காப்பாற்றவில்லை!


     ஜனநாயகம் என்ற பெயரால் அவ்வப்போது கூத்துகள் நடத்தி மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்!

             எண்ணற்ற விதங்களில் மக்களுக்குள் பிளவுகளை அரசுகளே வளர்க்கின்றன!
பிரித்தாளும் சூழ்ச்சி வெள்ளையனைவிடத்  திறமையாகக் கையாளப் படுகிறது!


        மத்திய அரசுடன் போராடும் அல்லது அண்டிப் பிழைக்கும் காலனிகளாகத்தான் மாநில அரசுகள் இயங்கவேண்டும்!

உயர்ந்த பண்பாடுகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுச் சீரழிவுக் கலாச்சாரம் வளர்க்கப்படுகிறது!
ஊடகங்கள் தங்களின் லாபத்துக்காக மக்களின் நலனைக் காவுகொடுப்பதில் ஒன்றையொன்று விஞ்சுகின்றன!


இயற்கையையும் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் எண்ணம் அறவே இல்லாத விவசாயத்தையும் தொழில்களையும் கொண்டிருக்கிறோம்!



பக்தி என்ற பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்த்து மக்களை அதிலிருந்து விடுபடாமல் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்!



உயர்ந்த பண்பாடும் உயர்ந்த ஆன்மிகமும் கொச்சைப் படுத்தப்பட்டு சுயநலவாதிகளின் கூடாரங்களாக விளங்கும் மதங்கள் சொல்வதுதான் ஆன்மிகம் என்ற  அவலநிலையில் மக்கள் வாழ்கிறார்கள்!




தீய சக்திகள்  அதிகாரங்களைக் கைகளில் வைத்துக்கொண்டு மக்களை ஆட்டிப் படைக்க , நல்லவர்களும் தேச பக்தர்களும் கையாலாகாதவர்களாக கோழைகளாக மறைந்து வாழ்கிறார்கள்!



இத்தகைய ஒரு நாட்டில் குடிமக்களாக வாழ்வதற்குப் பெருமைப் படுவோம்!....

-கிருஷ்ணசாமி சுபாஷ்
-பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING