Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

விதைகளுக்கான 6-வது தேசிய மாநாடு

   விதைகளுக்கான 6-வது தேசிய மாநாடு அடுத்த மாதம் 12 முதல் 14-ம் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெறுகிறது.
        மத்திய விவசாய அமைச்சகத்தின் கீழ் செய்லபடும் தேசிய விதை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் நடத்தும் இந்த மாநாட்டில் நாடுமுழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
     நாடுமுழுவதும் உள்ள விதைகளை பாதுகாக்கும் விவசாயிகள், ஆய்வாளர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதே இந்த மாநாட்டில் நோக்கம். விதைகளின் தரத்தை பலதரப்பட்ட முறையில் மேம்படுத்துதல்,  
    விதைகளுக்கான தரத்தை உறுதிப்படுத்துதல், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் விதை வர்த்தகம், விதைகளுக்கான திட்டமிடல், அறிவுசார் சொத்துரிமையின் கீழ் தாவர வகைகளை பாதுகாத்தல், தரமான விதைகளை பாதுகாப்பதில் விவசாயிகளையும் பங்கேற்கச் செய்தல் போன்றவை இந்த மாநாட்டின் நோக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.




பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது



   னித இனத்திற்கு மட்டுமல்லாமல் இயற்கைக்கும் உற்ற துணையாக விளங்கும் சிட்டுக்குருவி இனத்தை அழியாமல் பாதுகாக்க பறவை ஆர்வலர் ஒருவர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்... அதைப்பற்றிய தொகுப்பு.
கீச்... கீச்... இப்படி இனிமையாக ஒலி எழுப்பும் சிட்டுக்குருவிகளை காணும் வாய்ப்பு அரிதாகி விட்டது... நகர்ப்பகுதி என்றால் கேட்கவே வேண்டாம்...
இதை உணர்ந்தாலோ என்னவே, தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த பறவை ஆர்வலர் ராஜேந்திர பிரசாத், சிட்டுக்குருவிகளுக்கென்று செயற்கை வாழிடம் அமைத்து வேம்பார் கிராமத்தையே சிட்டுக்குருவிகளின் சொர்க்கபுரியாக மாற்றியுள்ளார்.
இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்
வேம்பார் கிராமம் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்கள் இடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த எஸ்3 என்ற அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார் ராஜேந்திர பிரசாத்.
சிட்டுக் குருவிகளின் அழிவு பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதையே நமக்கு உணர்த்துவதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், இதுபோன்ற பறவை இனங்களை பாதுகாக்க ராஜேந்திரபிரசாத்தைப் போல் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க முன்வரலாம் என்கின்றனர்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING