Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர்


pasumainayagan பசுமை நாயகன்
     குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் அம்மா குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர், பேருந்து பயணிகள் 7 பேருக்கு 10 ரூபாய் குடிநீர் பாட்டிகளை வழங்கி விற்பனையை துவக்கி வைத்தார்.
இந்த திட்டம் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 10 ரூபாய் குடிநீர் பாட்டில் சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் அனைத்து மாவட்ட பேருந்து நிலையங்களில் விற்கப்படுகிறது.
நெடுந்தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் இந்த குடிநீர் பாட்டில்கள் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா குடிநீர் திட்டத்தை மேலும் 9 இடங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் திட்டம் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா ஜூன் மாதம் 21 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி, அண்ணா பிறந்த நாளில் அம்மா குடிநீர் திட்டத்தை அவர் இன்று தொடங்கிவைத்தார்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING