Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

இயற்கைக்கு மாறிய விநாயகர்



       சுற்றுச்சூழல் குறித்து அதிகரித்து வரும் விழிப்புணர்வால், இந்த ஆண்டில் விநாயகர் சிலைகள் முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத பொருட்கள் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இயற்கைக்கு மாறிய விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகளைத் தயாரித்து வழிபட்டு, கிணறு முதல் கடல் வரை கரைக்கப்படுவது நம்நாட்டில் வழக்கமான விஷயம். சமீப ஆண்டுகளாக, ரசாயன வண்ணப்பூச்சு, பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என பல்வேறு பொருட்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டன.
அவற்றால், நீர்நிலைகள் மாசு அடைவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பி வந்த நிலையில், சிலை தயாரிக்கும் தொழிலாளர்களும் அதை இப்போது உணர்ந்துள்ளனர். இந்த ஆண்டில் களிமண், காகிதக் கூழ், தண்ணீரில் கரையும் இயற்கை வண்ணங்களில் தயாராகி சென்னையை அலங்கரிக்க உள்ள விநாயகர் சிலைகள், பக்தர்களைக் கவர்ந்துள்ளன.
அனைவரும் மகிழத்தக்க மாற்றம்
செயற்கை மற்றும் ரசாயன பொருட்கள் இல்லாமல் விநாயகர் சிலை தயாரிக்க தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.
சுற்றுச்சூழல் ஆதரவு அமைப்புகளும் இதை வலியுறுத்தி வருவதால் இந்த ஆண்டில் இயற்கை விநாயகரை வழிபடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது தயாரிப்பாளர்கள், வாடிக்கையாளர்கள் இருதரப்பினருக்கும் மகிழ்ச்சி தருகிறது.
ரூ.500 முதல் ரூ.10,000 விலையில் விற்பனை
சென்னை காசிமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் விநாயகர் சிலைகள் இந்த ஆண்டு 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலையில் விற்கப்படுகின்றன.
மனிதர்கள் மட்டுமின்றி மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காத களிமண்ணில் விநாயகர் சிலை தயாரிப்பதே நல்லது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விலங்குகள் நல ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது. அதை மனதில் கொண்டால், கடவுளும் மகிழ்வார் என நம்பலாம்.

திருவாரூரில்
மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ள 
 இயற்கை உரங்களைக் கொண்டு காய்கறித் தோட்டம்






     திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள வடுவூர் வடபாதி ஊராட்சியில், இயற்கை உரங்களைக்கொண்டு காய்கறித் தோட்டம் அமைத்து, மக்களுக்கு தரமான காய்கறிகள் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
வடுவூர் வடபாதி ஊராட்சிமன்றத் தலைவர் இளவேணியின் முயற்சியால், 3 ஏக்கர் பரப்பளவில் உயர்ரக மரங்களும், காய்கறி தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென நியமிக்கப்பட்ட இரண்டு பணியாளர்களால் காய்கறி தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிது. இந்த தோட்டத்தில் விளையும் காய்கறிகளால், மக்களுக்கு தரமான காய்கறிகள் கிடைப்பதோடு, ஊராட்சிக்கு நாள்தோறும் 500 ரூபாய் வருவாயும் கிடைக்கிறது.

       தரிசாக கிடந்த பொது இடத்தை பயனுள்ள வகையில் மாற்றியதால், மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ள இந்த ஊராட்சிக்கு, வேளாண்மைத்துறை மூலம் உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த காய்கறித் தோட்டத்தை, விரிவுபடுத்த திட்டமிட்டிருப்பதாக ஊராட்சிமன்றத் தலைவர் இளவேணி தெரிவித்தார்.
                                                       -பசுமை நாயகன்

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING