Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசார்களின் உடல் படிமங்கள்

pasumai nayagan பசுமை நாயகன்pasumai nayagan பசுமை நாயகன்

     றத்தாழ 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசார்களின் உடல் படிமங்கள் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்திருப்பது அனைவரும் அறிந்த செய்தி தான். இந்தப் படிமங்களைப் பாதுகாக்கும் நோக்கில் பெரம்பலூரில் உள்ள கிராமத்தில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட்டது. ஆனால், இன்று அதன் நிலை எப்படி இருக்கிறது ? அதன் தொகுப்பு.
திறக்கப்படாமல் இருக்கும் அருங்காட்சியகம்
    பெரம்பலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சாத்தனூர் கிராமத்தில் உள்ள ஒரு நீரோடையின் குறுக்கே சுமார் 10 மீட்டர் நீளத்தில் புதையுண்டு கிடந்தது தான் இந்தக் கல்மரம். இந்தக் கல்மரப் படிமத்தை கடந்த 1940 ஆம் ஆண்டு இந்திய புவியியல் ஆராய்ச்சிக் கழக இயக்குநர் எம்.எஸ். கிருஷ்ணன் என்பவர் கண்டுபிடித்தார். இந்தப் புவியியல் பொக்கிஷத்தை அனைவரும் அறியும் வண்ணம் கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் தேசியக் கல்மரப் பூங்கா அமைக்கப்பட்டது. பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்ட டைனோசார் முட்டை, டைனோசாரின் உடல் பாகங்கள் உள்ளிட்ட படிமங்களைக் காட்சிக்கு வைக்க அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக அது திறக்கப்படாமலேயே இருக்கிறது.
"சாலை வசதிகள் இல்லை"
   இது ஒரு புறமிருக்க, இந்தப் பூங்காவை வந்து பார்ப்பதற்கு போதிய போக்குவரத்து வசதிகளும், சாலை வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.
‌வருங்கால சந்ததிகளுக்காக
   விரைவில் சாலை வசதிகளை மேம்படுத்தி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தால் சுற்றுலாப் பயணிகள், ஆய்வு மாணவர்கள் ஆகியோர் மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரும் பயனடைவார்கள் என்பதே இப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.


COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING