Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

இரண்டு அவைகளிலும் லோக்பால் மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் -பாஜக

Pasumai Pasumai Nayagan

        லோக்பால் மசோதாவை நிறைவேற்றவிடாமல் காங்கிரஸýம் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் தடுத்து நிறுத்தி வருகின்றன என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
  "லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்திய நிலையில், பாஜக இவ்வாறு தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேயிட்லி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
   லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறது. மாநிலங்களவையில் லோக்பால் மசோதா வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட உடனே நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் அமளியால் அவ்வாறு நடைபெறவில்லை.
    இந்த மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட வேண்டும். காங்கிரஸýம் அதன் கூட்டணிக் கட்சிகளும் திங்கள்கிழமையும் அவை நடைபெற அனுமதிக்காமல் மீண்டும் அமளியில் ஈடுபட்டால், மசோதாவை விவாதம் இல்லாமல் நிறைவேற்றுவதற்கும் பாஜக தயாராக உள்ளது. இரண்டு அவைகளிலும் லோக்பால் மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
   இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ள சட்டத் திருத்தங்களை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று அவர் கூறினார்.

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING