இயற்கையான பொருட்கள் அனைத்துமே அழிக்கூடியதுதான், அதில் நுன்னுநூயிர்கள் செயல்பாடு இருக்கும். இப்படி இருக்க பால் 120 நாட்கள் கெடாது என்றால் அது பாலா ?
மனிதன் சராசரி ஆண்டுடொன்றுக்கு 2கிலோ இரசாயன, உரம், பூச்சிக்கொல்லி, கலைக் கொல்லி, மருந்துகளை உட்கொண்டு வருகிறான் இவற்றை செரித்து நஞ்சற்றதாக ஆக்கி, வெளியேற்றுவதனால் நம் ஈரலும், சிறுநீரகமும் செயலிழந்து போய்விடுகின்றன.
ஒவ்வொருவருடைய சிறுநீரகமும், கல்லீரலும் இப்போதைய நிலையில் முன்று மனிதர்களுக்கான வேலையைச் செய்து தாக்குப்பிடித்துக் கொண்டுருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு உறுப்பும் அதற்கான இயற்கையான செயல்பாட்டை விட முன்று மடங்கு அதிகமாக வேலை செய்து தாக்குப்பிடித்துக் கொண்டுருக்கின்றனர் என்று பொருள்.
இதில் நாளமில்லா சுரப்பு நீர்களின் சமன்பாட்டு அளவும், நாம் உட்கொள்ளும் பாலின் முலம் பாதிக்கப்பட்டால், நம் உள்ளுறுப்புகள் எப்படி, எத்தனை காலத்திற்கு நோய் நொடி இல்லமால் இயங்கும் ?
- செய்தியாளர் : பவுன்சாமி