தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட உணர்ச்சிகளில் கோபமும் ஒன்று. கோபத்தை சரியாகக் கையாளவில்லை என்றால் தனக்கும், குடும்பத்துக்கும், சமூக்கத்துக்கும், நாட்டுக்கும் தீமைதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
* சரியாக நிர்வகிக்கபடவில்லை என்றால், கோபம், உடலுக்கும் மனதக்கும் சமூகத்துக்கும் தீமைகளையே ஏற்படுத்தும்.
* கோபவசப்பட்டவர் நியாய, அநியாயத்தை அலசிப்பார்க்க முடியாது. சரியான முடிவை எடுக்க முடியாது. ஆகவே, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மற்றவர்மேல் பழி போடுவார்கள்.
* கோபம் கொண்டவர்கள் மனதளவில் தங்கள் முழு ஆற்றலையும் செய்களில் ஈடுபடுத்த முடியாது. மனக்கவலை, வெறுப்பு, எதிர்பார்ப்பு, எதையும் அநியாயமாகவே எடுத்துக்கொள்வது, ஆபத்தை உணர்வது, அச்சம் ஆகிய எதிர்மறை உணர்ச்சிகளை, ஆற்றல் குறைவு தூண்டிவிடும்.
* சமூக விரோதச் செயல்களை செய்யும்படி கோபம் தூண்டும்.
* உறவுகளை கோபம் துண்டித்துவிடும். தாம்பத்திய உறவை அறுத்துவிடும்.
ஆகவே, கோபத்தை அடக்கியாளவில்லை என்றால் எந்த நிலையிலும் அது தொல்லைதான் ; ஆபத்துதான்.
-பசுமை நாயகன்