சுனாமி மற்ற இயற்கை சீற்ங்களைவிட அதிக சக்தி வாய்ந்தது, அதே போல் அதிக பாதிப்பும் பேரழிவையும் ஏற்படுத்திக்கூடியது எப்போது வரும் என்றும் கனிக்க முடியாது. வரும் முன் தடுக்கவும் முடியாது.
அதிகபட்சம் சில மணி நேரத்திற்கு முன் சமிக்ஞை கொடுக்கும் அதே போல் சில மணி நேரங்களில் பேரழவை ஏற்றபடுத்தும் சுனாமி வருவதை சில மணி நேரங்களுக்கு முன் அறிவதை போல் சில மனி நேரங்களில் தடுத்துவிடமுடியாது.
துறைமுகங்கள், அனுமின்சார நிலையங்கள் போன்றவற்றையொட்டி கடலில் மதிக்க விடப்பட்டிருக்கும் அலைமானிகள், சுனாமியின் அளவை நேரடியாக மதிப்பிட உதவிக்கின்றன.
ஆனால் அந்த பகுதிகளில் கடலில் ஆழம், துறைமுகக் கட்டுமானத்தின் அமைப்பு போன்ற நிலைமைகள் ஒரு சுனாமியின் தன்மையைத் தீர்மானிப்பதாக உள்ளன. எனவே, இதர பகுதிகளில் அந்த சுனாமியின் தாக்கங்கள் எப்படி இருக்கும் என்பதை முன் கூட்டியே மதிப்பிடுவதற்கு இவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.
தகவல்களை உடனடியாகத் திரட்டுவதில் இப்படியொரு சிக்கல் இருப்பதால்தான், 1946-ம் ஆண்டுக்கும் பிறகு அறிவிக்கப்பட்ட சுமார் 20 சுனாமி எச்சரிக்கைகள், தவறான, மிகையான எச்சரிக்கைகளாவிட்டன.
ஏனென்றால், அந்த சுனாமிகள் கரையைத் தொட்ட போது, பலமிழந்துவிட்டன. அழிவுகள் எதையும் ஏற்படுத்தாமலே திரும்பிவிட்டன.
ஆயினும், ஆழ்கடல் சுனாமிகள் பற்றிய தகவல்கள் வருகிறபோதே அவற்றை மதி்ப்பிடக்கூடிய கணினிசார்ந்த தொழில்நுட்பங்கள் அன்மைக் காலமாக உருவாக்கப்பட்டு வருகின்றனர்.
சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிலி நாட்டின் கடலோரத்தில் 4 கீ.மீ விட்டத்தில் இருந்து ஒரு பெரிய பாறை விழந்தது என்றும், அது பெரிய சுனாமியைக் கிளப்பிவிட்டது என்றும், அந்தச் சுனாமி, தென் அமெரிக்க கண்டத்திலும், அண்டார்க்டிக் பகுதியிலும் பெரும் நிலப்பரப்புகளை விழுங்கியது என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.