முதல் அமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு http://cmcell.tn.gov.in என்ற புதிய வலைதளத்தினை நேற்று முன்தினம் முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த வலைதளத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு உடனுக்குடன் மனுதார்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.
புதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அந்த மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கம்பூயூட்டர் மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உள்ள முதல் அமைச்சர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால், மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.
தமிழக பொதுமக்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி போக்குவரத்து சிரமங்களை தவிர்க்கும்மாறு தகவல்தளம் அன்புடன் கேட்டுகொள்கிறது.
-பசுமை நாயகன்