எஸ் சி வி எனப்படும் சன் குழும நிறுவனத்தின் கேபிள் இணைப்பு பெற்றவர்களால் புதிய தலைமுறை தொலைக்காட்சியை காண இயலவில்லை. எஸ்சிவியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சேவை தெரியவில்லை என்று நேயர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்சிவி நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக சரியான விளக்கம் எதையும் எஸ்சிவி நிறுவனம் தரவில்லை.
கட்சி சார்பு ஏதுமின்றி உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது புதிய தலைமுறை.
நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் செய்திகளை வெளியிட்டு வரும் புதிய தலைமுறையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இலங்கை இனப் படுகொலை, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
ஊழல்களை உண்மையாகவும், துணிவுடனும் அம்பலப்படுத்தி வருகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி. இதனையடுத்து, புதிய தலைமுறையை முடக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாகவே, சென்னையில் ஒளிபரப்புக்கு தடங்கல் எனத் தெரிகிறது. மக்களுக்காக குரல் கொடுக்கும் புதிய தலைமுறை இப்போது நசுக்கப்படுகிறது. ஆனால், உண்மை எப்போதும் வெல்லும் என்று உறுதியாக நம்புகிறது புதிய தலைமுறை.
இது போன்ற நெருக்கடிகளுக்கு அடிபணியாமல், புதிய தலைமுறை தனது கடமையை தொடர்ந்து செய்யும் என நேயர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். உண்மைக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதையும் புதிய தலைமுறை உறுதியாக நம்புகிறது.

-பசுமை நாயகன்