மதுரையில் நீர் ஆதாரங்களை அழித்த செயல்கள் வெளிச்சத்திற்கு வந்ததது !
மதுரை ஆட்சியராக இருந்த சகாயம் அவர்கள் மே 1 ஆம் தேதி ஒரு ஆய்வு செய்து மே 19 ஆம் தேதி அந்த ஆய்வின் அறிக்கை தொழில்துறை செயலாளருக்கு அளித்துள்ளார். இந்த செய்தி புதிய தலைமுறையிலும் ஒளிபரப்பபட்டது. மதுரையில் உள்ள மலைகளில் தானியார் குவாரி மூலம் 16 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது என்றும் கால்வாய், ஓடை, கம்மா என ஆக்கிரமிப்பு செய்து கணிமங்களை சூறையாடிள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தற்போதிய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் 18 குழுக்கள் அமைத்து ஒரு வாரத்திற்க்குள் விசாரனை முடிக்க உத்தரவிட்டுள்ளார். இதில் 175 குவாரி நிறுவனங்கள் விசாரிக்கபட இருக்கின்றனர். முக்கியமாக ஒலிம்பிஸ், சிந்து, பி.ஆர்.பி என்ற குவாரி நிறுவனங்கள் ஊழலில் அதிகமாக இடுபட்டது தெரியவந்துள்ளது. கணிமங்களை வெட்டி எடுக்கும் போது விவசாய நிலங்களுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் அழிவு ஏற்படுத்தாமல் செயல்படவேண்டும் என்று சட்டம் இருந்தும் இவர்கள் நீர் ஆதாரங்களை மூடி மதுரை பூமியை பாழ்படுத்தியுள்ளனர்.
(பயோடெரரிசம்) தீவரவாதத்தை விட மோசமான இந்த செயலை தோண்டியெடுத்த சாகயம் I.A.S அவர்களுக்கு கோடானகோடி பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
-பசுமை நாயகன்