நட்சத்திர ஹோட்டல்களில், மாலை 6 மணிக்கு மேல் ஜெனரேட்டர்களை மட்டுமே
பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை, தமிழ்நாடு
மின்சார பகிர்மானக் கழகம் விதித்துள்ளது.
இத்துடன், ஏ.சி.யின் வெப்ப நிலையை ஒரே சீராக 26 டிகிரியில் நிலை
நிறுத்தி, மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்றும், மி்ன உற்பத்தி மற்றும்
பகிர்மானக் கழகம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மாலை 6
மணிக்கு மேல் அலங்கார விளக்குகள், விளம்பர பலகை விளக்குகள் ஆகியவற்றுக்கு
மின்சாரத்தை பயன்படுத்துவதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும் என்றும்
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சேமிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றும், அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மின்சார உற்பத்திக்கும் மின்சார தேவைக்கும் இடையே 4 ஆயிரம்
மெகாவாட் பற்றாக்குறை உள்ளதால், நிலைமை சீராகும் வரை அனைத்து தரப்பினரும்
ஒத்துழைக்க வேண்டும் என்றும், மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
கேட்டுக் கொண்டுள்ளது.
-பசுமைநாயகன்