சென்னையில் ஒரு மணிநேரமாக இருந்து வந்த மின்வெட்டு நேரம், இன்று முதல் 2
மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மின்தடை நேரமும் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் நேற்று வெளியிட்ட
அறிக்கையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், தினசரி 2 மணிநேரம்
மின்சாரம் துண்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளில் தினசரி 14 மணி நேரத்திற்கும் மேலாக
மின்வெட்டு இருக்கிறது. இதன் காரணமாக விவசாயம், நெசவு உள்ளிட்ட தொழில்கள்
பாதிக்கப்பட்டன. எனினும், சென்னையில் ஒரு மணி நேரம் மட்டும் மின் விநியோகம்
துண்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில்
தமிழகத்தின் மின்நிலைமை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தின் முடிவில், மின் பற்றாக்குறையை ஆராய 10 பேர் கொண்ட குழுவை
அமைத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்தக் குழு ஒவ்வொரு வாரமும்
திங்கட்கிழமை கூடி மின்சார விநியோக நிலை குறித்து ஆராய்ந்து முதலமைச்சரிடம்
அறிக்கை அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.