நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை நவம்பர் 21-ம் தேதி தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத் தொடர் டிசம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் என தெரிகிறது.
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜுடன் மத்திய
அரசுத் தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மழைக்காலக் கூட்டத் தொடரில் நிலக்கரிச் சுரங்க முறைகேடு விவகாரத்தை
எதிர்க்கட்சிகள் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
இந்த நிலை குளிர்காலக் கூட்டத் தொடரிலும் தொடரலாம் என கருதப்படுவதால், அதை
எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக
கூறப்படுகிறது.
குளிர் காலக் கூட்டத் தொடருக்கு வேறு 4 தேதிகளை மத்திய அரசு
முன்வைத்ததாகவும், ஆனால், வழக்கமாக நடைபெறும் நவம்பர் 21 முதல் டிசம்பர்
21 வரையிலான தேதிக்கு பாரதிய ஜனதா ஆதரவு தெரிவித்ததாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
-பசுமை நாயகன்.
-பசுமை நாயகன்.