கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களால், தமிழக எல்லையான ஓசூரில் நிலைமை சீரடைந்துள்ள போதிலும், மற்ற எல்லைப் பகுதிகளில் இன்னும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் – கர்நாடகத்தின் எல்லை பகுதியில் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் வன பகுதி அமைந்துள்ளது.
இந்த பகுதி வழியாக மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய பகுதிக்கு செல்ல முடியும். கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருவதால் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் பண்ணாரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், கர்நாடகாவிற்கு சரக்குகளை எடுத்து செல்ல லாரிகளுக்கான முன்பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களும் ஆசனூர் அருகே மலைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன..தமிழகத்தின் பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விட பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டதைக் கண்டித்து கர்நாடக எல்லைப்பகுதிகளில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
-பசுமை நாயகன்.