ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஈமு கோழி வளர்ப்புத் திட்டத்தில்
மோசடி செய்ததாக கேஜி ஈமு பண்ணை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில்,
கே.ஜி. ஈமு நிறுவன உரிமையாளர் கார்த்திக், அவரது மனைவி காயத்ரி மற்றும்
ஒரு ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும்
கேரளாவில் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த 3 மாதங்களாக அவர்கள் அங்கு தலைமறைவாக இருந்ததாக
கூறப்படுகிறது. கே.ஜி. நிறுவனம் 400-க்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி ரூபாய்
வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் ஏராளமான ஈமு கோழிப்
பண்ணைகள் செயல்பட்டு வந்தன. ஈரோடு மாவட்டத்தில் ஈமு பண்ணைத் திட்டத்தில்
மோசடி செய்ததாக இதுவரை 43 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்துள்ளனர். -பசுமை நாயகன்.