கூடங்குளத்தில் உள்ள முதல் அணுஉலை வெகுவிரைவில் செயல்படத்தொடங்கும் என
அணுசக்தி ஆணைய தலைவர் ரத்தன் குமார் சின்கா தெரிவித்துள்ளார். தலா ஆயிரம்
மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகளின் கட்டுமானப்பணிகள்
முழுவதும் முடிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கூடங்குளம் இரண்டவாது அணுஉலை அடுத்தாண்டு தொடக்கத்தில்
செயல்படத்தொடங்கும் என்றும் சின்கா குறிப்பிட்டுள்ளார். மும்பையில்
நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார். அதே
நேரத்தில், கூடங்குளம் முதல் அணுஉலை அடுத்த வாரம் செயல்படத்தொடங்கும் என
அணுசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பும் பணி கடந்த செப்டம்பர் 19ம் தேதி
தொடங்கி அக்டோபர் 2ம் தேதி முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், சர்வதேச அணுசக்தி முகமை
அதிகாரிகள் முன்னிலையில் அழுத்த சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்
என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் முதல் அணுஉலை செயல்படத்
தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
-பசுமை நாயகன்