பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று
வருகின்றன. டெல்லி மற்றும் மும்பையில் இன்று காலை ஏராளமானோர் ஒன்றிணைந்து
சிறப்பு தொழுகை நடத்தினர். இதே போல் தமிழகத்திலும் பக்ரீத் பண்டிகை வெகு
சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை திருவல்லிகேணி, ஆயிரம் விளக்கு, தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில்
இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது. இதேபோல, திருச்சி,
நெல்லை, கோவை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நடந்த பக்ரீத் சிறப்பு
தொழுகையில் கலந்து கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை
தெரிவித்துக் கொண்டனர்.
புதுவை பெரியபள்ளிவாசல் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட அனைத்து
இடங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை
நடைபெற்று வருகிறது. கடவுளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட இறை தூதர்
இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூறுவதே இந்த பக்ரித் திருநாள் ஆகும்.