நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கைக்கு
மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி
ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக்கொண்ட பிறகு,
மைனாரிட்டி அரசாக மாறிவிட்டதாக அவர் கூறியுள்ளார். எனவே, தார்மீக ரீதியில்
ஆட்சியில் தொடர எந்த உரிமையும் இல்லை என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு, காங்கிரஸ் அரசு என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.