Color Scrolling

பசுமையை காப்பதே அவசரக் கடமை!****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.!******மரம்வளர்ப்போம்! மானுடம் காப்போம்!!GREEN COVER IS THE ONLY IMMUNITY AGAINST GLOBAL WARMING !

Scrolling

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com

ஆர்த்தி ராவ்வுக்கு நீதி கிடைக்க வேண்டும்

 

   ந்து மதத்தின் பெயரைக் கெடுத்தவர் நித்தியானந்தா  இந்தியாவில் இவளவு தொழில் நுட்ப வளர்ச்சிகளும், சட்டங்களும் ,நீதி துறைகளும் இருந்தும் என்ன பயன் ?
குற்றவாளிகளை தண்டிக்க முடியவில்லையே?
    ஆர்த்திராவ்தான், நித்தியின் அறையில் ரகசியக் கேமராவைப் பொருத்தி, ரஞ்சிதாவுடனான நித்தியின் லீலைகளைப் பதிவு செய்தவர் கர்நாடகாவில் நித்திக்கு எதிரான சுனாமி கிளம்பக் காரணமாக இருந்தவர் நித்தியின் முன்னாள் பெண் சீடரான ஆர்த்திராவ்.

ஏசியா நெட்டின் கன்னட சேனலான சுவர்ணா தொலைக்காட்சியில், நித்யானந்தாவின் முகத்திரையை பகிரங்கமாய் கிழித்து, கர்நாடக மாநிலத்தையே நித்திக்கு எதிராகப் பொங்க வைத்திருக்கிறார் ஆர்த்தி ராவ்.

நித்தி தன்னை எப்படி எப்படியெல்லாம் தன் இச்சைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர் விவரித்ததைப் பார்த்த பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர். ஆன்மீகத்தையே ஆபாசமாக்கிவிட்டாரே என ஆண்கள் கொந்தளித்தனர். இப்படி கர்நாடகாவையே அதிரவைத்த இந்த ஆ

நித்தியின் இன்னொரு முகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்க இரண்டு மாதங்களாக முயற்சி செய்து முடியாமல் போன ஆர்த்தி ராவை நக்கீரனுக்காக நாம் சந்தித்தபோது, மளமளவென தன் மனதில் இருந்ததையெல்லாம் மடைதிறந்த வெள்ளம்போல் கொட்ட ஆரம்பித்துவிட்டார்.


இதோ நித்தியால் சீரழிந்த அவரது வாழ்க்கை…


‘நான் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவள். மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிச்ச நான், மேற்படிப்பை ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவில் படிச்சேன். அங்கேயே வேலை தேடிக்கொண்டேன். அங்கு நான் காதல் திருமணமும் பண்ணிக்கொண்டேன். அமெரிக்காவில் பரபரப்பாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் என் மனம் அமைதியைத் தேடியது.


நான் இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டவள் என்பதால், நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு 2004-ல் கர்ப்பிணியாக என் கணவர் சகிதம் வந்தேன். என்னை நித்யானந்தா அபார்ஷன் பண்ணிக்கச் சொல்லிவிட்டார் .நித்யானந்தாவிடம் நேரடியாக தியானப் பயிற்சி எடுத்துக்கொண்ட ஆனந்த ஸ்பூரணாவின் முதல் குரூப்பில் நானும் என் அப்பா ஸ்ரீதர் ராவும் இருந்தோம். நித்யானந்தா, எனக்கு ஆசிரமத்தில் முக்கியமான இடத்தைக் கொடுத்தார். அவரது பர்சனல் விவகாரங்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் ஒப்படைத்தார்.


இந்த நிலையில் ஒருநாள், என்னிடம் நித்தி, « குரு சிஷ்ய உறவு முறையில், ஜீவமுக்தியை அடைய ’மதுரபாவா’ என்ற வழியில் இறங்கலாம். நான் கண்ணனாகவும் நீ ராதையாகவும் பாவித்துக்கொள்வோம். உன்னைத் தவிர வேறு யாரோடும் இந்த முறையைக் கையாண்டதில்லை. கையாளப்போவது மில்லை’ என்றபடி, மெல்ல மெல்ல என்னை தன்வசப் படுத்தி உறவுகொண் டார். 2004-ல் இருந்து 2009 வரை என்னை தொடர்ந்து பயன் படுத்திக்கொண்டார். அவர் போகிற இடங்களுக்கும் அவரோடு செல்லும் என்னை பயன்படுத்திவந்தார்.


ஒருமுறை கும்ப மேளாவிற்குப் போன போது, அங்கு கூடா ரத்தில் ஓய்வெடுத் தோம். திடீரென என்னை அழைத்தார். ஓடிவந்த என் காலெல்லாம் ஒரே சேறாக இருந்தது. அந்த நேரத்திலும் என்னை அணுகினார்.


‘காலெல்லாம் சேறாக இருக்கிறதே’ என்று நான் தடுத்த போது, ‘இப்படி இருந்தாதான் பிடிக்கும்’ என்றபடி என்னை வளைத்துப் பிடித்தார். அப்போது 16 வயதே ஆன ஒரு இளம்சீடர் அங்கே வர, ‘இங்கெல்லாம் நீ வரக்கூடாது’ என அவரைத் துரத்திவிட்டுவிட்டு உறவு கொண்டார்.


ஆசிரமத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த லெனின் தர்மானந்தா ஒருமுறை நித்தியோடு உள்ள உறவு பற்றி என்னிடம் கேட்டார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். அவரும் அதிர்ச்சியானார். நாளாக நாளாக ஆசிரமத்தில் நித்தியோடு பல பெண்கள் தொடர்பு எங்களுக்கு தெரியவந்தது.


இருந்தும் எனக்கு குழப்பம். ஒருநாள் நித்தியை கவனித்துக் கொள்பவரிடம் அவர் அறையில் ஒரு ரூம் பிரஷ்னெர் வைக்க அனுமதி வாங்கினேன். பின் அதில் ஒரு சீக் ரெட் கேமரா வைப் பொருத்தினேன். அது சின்ன அசைவு தெரிந்தாலும் உயிர்பெற்று படம்பிடிக்கக் கூடிய மோஷன் ஆக்டிவேட்டட் கேமராவாகும்.


அதை அவர் ரூமில் வைத்து விட்டு இரண்டு நாள் கழித்து அந்தக் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்த நான் அதிர்ந்துபோய்விட்டேன். என்னால் அதை நம்பவே முடியவில்லை. ரஞ்சிதாவுடன் அவர் அசிங்கமாய்… ச்சே… என்னை ஏமாற்றி நாசப்படுத்தியது போலவே அவர் எல்லோரையும், ஒருவருக்குத் தெரியாமல் ஒருவராக நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டபோது என் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.


உடனே அந்த கேமராப் பதிவுகளை லெனின் தர்மானந்தாவிடம் கொடுத்துவிட்டு, ஆசிரமத்தில் இருந்தால் உயிரோடு நித்தி விட்டு வைக்கமாட்டார் என்று அமெரிக்காவுக்கே போய்விட்டேன் » என்றார் படபடப்பு மாறாதவராய்.


‘கர்நாடகா சி.ஐ.டி. போலீசாரிடம் ரகசிய வாக்குமூலம் மட்டும் கொடுத்திருந்த நீங்கள் இப்போது வெளிப்படையாக பேச என்ன காரணம்?’


‘என்னையும் என் குடும்பத்தினரையும் தொடர்ந்து மிரட்டிக்கொண்டிருக்கிறார் நித்தி. எங்களுக்கு பல்வேறு வகையிலும் அவரது ஆட்கள் மூலம் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இவரால் என்ன ஆபத்துவேண்டு மானாலும் வரலாம். என் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்.


நித்யானந்தாவிடம் செகரட்டரியாக இருந்த நித்தியானந்த கோபிகா, இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. பல ரகசியங்களைத் தெரிந்து வைத்திருக்கும் அவரை உயிரோடு விட்டுவைத்திருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. அவர் என்னையும் இதுபோல் இல்லாமல் ஆக்கலாம். நித்தி என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதை புரிந்துகொண்டேன்.


நாளைக்கே அமெரிக்காவில் எனக்கு எதிராக அவர் ஒரு தீர்ப்பை வாங்கலாம். கர்நாடகாவில் இருக்கும் வழக்கைக் கூட டிரயலுக்கு வரவிடாமல் ஏதேதோ செய்துகொண்டே இருக்கிறார். அவர் ஜெயிக்கலாம். நான் தோற்கலாம். இல்லை அவர் என்னை சாகடிக்கலாம். எது நடந்தாலும் பரவா யில்லை.


இனி உண்மைகள் சாகக்கூடது என்பதால்தான் மீடியாக்கள் முன்பு வந்தேன்’ என்றார் கண்ணீர் பொங்க.


‘நீங்கள் நித்யானந்தாவிடம் கற்றுக்கொண்ட பாடம் என்ன?’ என்றோம்.


ஆர்த்தி ராவோ ‘கடவுளை மட்டுமே நம்ப வேண்டும். வாழ்க்கையிலும் வார்த்தையிலும் உண்மையை வைத்திருக்கும் உண்மையான குருவை நாடவேண்டும். படாடோபமாக வலம் வரும் போலிச் சாமியார்களை, ஆடம்பரமான ஆன்மீக வேட தாரிகளை நம்பக்கூடாது. இதுதான் நான் கற்றுக்கொண்ட பாடம். மனோவசியத்தால் என்னைப் போன்ற பெண்கள் பலரும் அந்த நித்யானந்தாவிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.


தங்கள் பாதிப்புகளை வெளியே சொல்ல பயந்துபோய் அங்கேயே ஒடுங்கிப் போய்க் கிடக்கிறார்கள். எனது வார்த்தைகளைக் கேட்டு அவர்களில் ஒருவர் தப்பித்து வெளியே வந்தாலே போதும், அது உண்மைக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்’ என்று கண்ணீரோடு கைகூப்பி முடித்துக்கொண்டார்.


ஆர்த்தி ராவ்வுக்கு நீதி கிடைக்க வேண்டும்..............?
                                             

                                                                      - Sivakumar Selvaraj

COMMENTS

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING

GREEN COVER is the only IMMUNITY againts GLOBAL WARMING
HELP US FOR GLOBAL COOLING