மத்திய அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக வெளியுறவு
அமைச்சர் பதவியை எஸ்.எம்.கிருஷ்ணா ராஜினாமா செய்துள்ளார். இதேபோன்று
அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக் ஆகியோரும் கட்சிப் பணிக்காக தங்களது
அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்.
புதிதாக மாற்றம் செய்யப்படவுள்ள அமைச்சரவையில் நடிகர் சிரஞ்சீவிக்கு
பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த
ஜெயந்தி நடராஜன், ஜெகத்ரட்சகன் ஆகியோரது இலாக்காக்கள் மாற்றப்படலாம் என
கூறப்படுகிறது. இதில் ரயில்வே இணை அமைச்சர் பதவி ஜெகத்ரட்சகனுக்கு
வழங்கப்படலாம் என தெரிகிறது.
இதனிடையே அமைச்சரவை மாற்றம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்
சோனியாகாந்தியுடன் பிரதமர் மன்மோகன்சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது புதிய கேபினட்அமைச்சர்களாக இளைஞர்கள் சிலரை சேர்ப்பது குறித்து
இருவரும் விவாதித்தனர். அதேநேரத்தில் அமைச்சர் பதவிக்குப் பதிலாக காங்கிரஸ்
செயல் தலைவர் என்ற பொறுப்பு ராகுல் காந்திக்கு வழங்கப்படலாம் என தகவல்
வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் இருந்து திரணமூல் காங்கிரஸ் விலகல், ஆ.ராஜா,
தயாநிதி மாறன், வீர்பத்ர சிங் ஆகியோரின் ராஜினாமா, பிரணாப் முகர்ஜி
குடியரசு தலைவர் ஆனதாலும், விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மரணம் மற்றும் அகதா
சங்மா விலகியதாலும் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
-பசுமை நாயகன்.