தமிழகத்தின் 27 மாவட்டங்களில் புதிதாக 121 பாலங்கள் கட்ட தமிழக அரசு 235
கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 3 பாலங்களும், கடலூர் மாவட்டத்தில் 4
பாலங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பாலமும் கட்டப்பட உள்ளன.
இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் 5 பாலங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 4
பாலங்களும், சேலம் மாவட்டத்தில் 8 பாலங்களும் கட்டப்பட உள்ளன.
மேலும், மதுரை மாவட்டத்தில் 2 பாலங்களும், தேனி மாவட்டத்தில் 3
பாலங்களும், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தலா 5 பாலங்களும்
கட்டப்பட உள்ளன. இதேபோல் வேறு சில மாவட்டங்களிலும் பாலங்கள் கட்டுவதற்கான
அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.