ஆந்திராவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆக
அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான நீலம் புயல் தமிழகம் வழியாக
ஆந்திராவுக்கு நகர்ந்தது.
இதன் காரணமாக ஆந்திராவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்களில்
பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் 2 லட்சத்திற்கும் அதிகமான
ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளை வெள்ள
நீர் சூழ்ந்ததால், சுமார் 50 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை
ஆந்திர முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி இன்று பார்வையிடுகிறார்.
-பசுமை நாயகன்