தீபாவளிப் பண்டிகையுடன், அடுத்தடுத்து திருமண நாட்களும் சேர்ந்து வருவதால்,
நாடு முழுவதும் கடந்த சில தினங்களில் தங்கநகை விற்பனை 30 சதவீதம்
அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாயை எட்டிவிட்ட நிலையில், இந்த தீபாவளிக்கு நகை விற்பனை அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று மும்பையை சேர்ந்த முன்னணி நகை நிறுவன உரிமையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக, கடந்த ஆண்டு தீபாவளியுடன் ஒப்பிடுகையில், தற்போது விற்பனை உயர்ந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தங்கத்தின் விலை உயர்வால், பண்டிகை மற்றும் திருமணத்துக்காக நகை வாங்குவோரின் ஆர்வம் குறையவில்லை என்று மற்றொரு நகை நிறுவன உயரதிகாரியும் கூறியுள்ளார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தங்க நகை விற்பனை 25 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், நகைகளுக்கு இணையாக, குறைந்த எடையிலான தங்க நாணயங்கள் விற்பனையும் அதிகரித்து வருவதாக நகை வணிகர்கள் தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில் புதன்கிழமை வரை தீபாவளி கொண்டாட்டம் நீடிக்கும் என்பதால் விற்பனை மேலும் உயரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறினர்.

-பசுமை நாயகன்