கடந்த முறையோடு ஒப்பிடுகையில் இந்தத் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தின்
போது சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்திருந்திருப்பதாக, தமிழ்நாடு
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வாரியத்தின் உறுப்பினர் செயலரான
பாலாஜி, இந்தத் தவலைத் தெரிவித்தார். சென்னையைப் பொருத்தவரை, கடந்த
தீபாவளியைக் காட்டிலும் ஒலி மாசு 8.2 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பதாக
அவர் கூறினார். நைட்ரஜன் மற்றும் கந்தக – டை – ஆக்ஸைடு துகள்கள் காற்றில்
கலப்பதும் இந்த ஆண்டு குறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற
உத்தரவை, பொதுமக்கள் ஓரளவு மதித்து நடந்து கொண்டதாகவும், பாலாஜி
தெரிவித்தார். வாரியத்தின் விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்டவை எதிர்பார்த்த
பலன் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
-பசுமை நாயகன்