சென்னையில் தரைதட்டிய கப்பலை, சிறை வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
நிலையில், இந்த கப்பலை மீட்கும் பணி விரைவில் துவக்கப்படும் என்று,
கப்பல்துறை டைரக்டர் ஜெனரல் அறிவித்துள்ளார்.
நீலம் புயல் காரணமாக நிலை தடுமாறி, சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை ஓரம்
ஒதுங்கிய பிரதிபா காவேரி கப்பல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புயல் காற்று வீசிய சமயத்தில் கப்பலில் இருந்து உயிர் பிழைக்க தப்பிய ஐந்து
பேரில், நான்கு பேரது சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. ஒருவரை தேடும் பணி
இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கப்பலில் இருந்த
ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை என்றும்,
உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி
தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம், விசாரித்தது.
அப்போது கப்பலை சிறைபிடித்து வைத்திருக்குமாறும், அதை செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில், கப்பல்துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகம் நேற்றிரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிரதிபா காவேரி கப்பலை பாதுகாப்பாக மீட்கும் பணி வரும் 7ம் தேதி துவங்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. கப்பலின் உரிமையாளர்கள், மீட்புப் படையினர், காப்பீட்டு நிறுவனத்தினர், இழுவை இயந்திர நிறுவனத்தினர் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட கூட்டத்தில், கப்பலை மீட்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கப்பலில், 357 டன்கள் எரிபொருளும், 3 . 5 டன் டீசலும் உள்ளதாக
கப்பல் துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல்
தரைதட்டியது குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-பசுமை நாயகன்