தீபங்களின் திருநாளாய் திகழும் தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரமாகவே, தீபாவளிப் பண்டிகை களை கட்டிய நிலையில்,
புத்தாடைகளை தேர்வு செய்யவும், இனிப்புகள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலை
மோதியது.
பட்டாசுகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருந்திருந்தாலும்,
பட்டாசுக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மத்தாப்பூ, தரைச் சக்கரம்
என வண்ண, வண்ண வாண வேடிக்கைகளுடன் நேற்றிரவு தொடங்கிய தீபாவளிப் பண்டிகை,
இன்று காலையிலும் பட்டாசுச் சத்தங்களுடனேயே விடிந்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் அதி காலையிலேயே எழுந்து,
குளித்து புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளியை கோலாகமாக கொண்டாடி
வருகின்றனர். ஏராளமானோர் காலையிலேயே கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு
செய்தனர்.
-பசுமை நாயகன்