இலங்கை உள்நாட்டுப் போரின்போது
ஆயிரக்கணக்கான மக்களை காப்பதற்கு ஐ,நா., தவறிவிட்டது என ஐ.நா., உள்
ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
இலங்கை இறுதிக்கட்டப்போரின்போது ஐ.நா.,வின் செயல்பாடுகள் குறித்து அந்த அமைப்பின் மூத்த அதிகாரியான சார்லஸ் பெட்ரி ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்துள்ளார். இந்த அறிக்கை, இன்னும் ஐ.நா.,பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் சமர்பிக்கப்படாத நிலையில், தற்போது அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களை பிபிசி., தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இலங்கை இறுதிக்கட்டப்போரின் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஊழியர்களை ஐ.நா., விலக்கிக்கொண்டது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்களை காப்பதில் மனிதாபிமான அடிப்படையில் ஐ.நா., அதிகாரிகள் செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வந்த ஐ,நா., அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் இல்லாத நிலையில், சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவ தாக்குதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதிலும், இலங்கை அரசின் வற்புறுத்தல் காரணமாக, இறந்தவர்களின் எண்ணிக்கையை ஐ.நா., சரியாக தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
போர் பகுதிகளில் பணியாற்றிய ஐ.நா., ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா., அதிகாரிகள் எதுவும் பேசவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய அளவில் உதவி தேவைப்பட்ட நிலையில், அப்பகுதியிலிருந்து ஐ,நா., வெளியேறிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை உலகிற்கு தெரிவிக்க ஐ.நா., தவறி விட்டதுடன், உயிர்பலிகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தின்போது ஐ.நா., உயரதிகாரிகளின் சாதாரண கூட்டம் கூட நடைபெறவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்பாவி மக்களை காக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது என்பதை இலங்கையில் பணியாற்றிய ஐ.நா., அதிகாரிகள் மறந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி ஆசிரியர் பேட்டி
ஐநா.,வின் செயல்பாடுகள் குறித்த உள் ஆய்வறிக்கை மீது ஐநா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் நடவடிக்கை எடுப்பார் என்று பிபிசி தமிழ் சேவை செய்தி ஆசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நியாயம் கிடைக்கும்

இலங்கை போர் தொடர்பான ஐ.நா. வின் உள்
அறிக்கையின் மூலம் இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என இலங்கை
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.
-பசுமை நாயகன்