விண்வெளியில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் 4 மாதமாக தங்கியிருந்த நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்.
விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சோயுஸ் விண்கலத்தில் புறப்பட்ட
சுனிதா, கஸகஸ்தானில் காலை 7.56 மணிக்கு தரை இறங்கினார். அவருடன் விண்வெளி
ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய மேலும் 2 பொறியாளர்களும் பூமி திரும்பினர்.
விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச ஆராய்ச்சி மையத்திற்கு சுனிதா
இரண்டாவது முறையாக பயணம் செய்தார். அங்கு 125 நாட்கள் தங்கியிருந்து
ஆராய்ச்சி மையத்தின் பணிகளை மேற்கொண்டார்.