நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. அடுத்த மாதம் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
மறைந்த சிவசேனா கட்சித்தலைவர் பால்தாக்கரேவுக்கு மாநிலங்களவையில்
உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். இது தவிர மறைந்த 10 உறுப்பினர்களுக்கு
இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்
கொண்டனர். குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியின் மகன் அபிஜித்தும்
பதவியேற்றுக் கொண்டார்.
கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு அந்நிய நேரடி முதலீடு குறித்து
விவாதிக்க பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் நோட்டீஸ் கொடுத்தன. இதே போல்
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து திரிணமுல் காங்கிரசும் நோட்டீஸ்
கொடுத்துள்ளது.