சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு
விவகாரத்தில், தி.மு.க.,வின் ஆதரவை பெறுவதற்காக, மத்திய அமைச்சர் குலாம்
நபி ஆசாத், தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்திக்கிறார்.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது பற்றிய வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. வாக்கெடுப்பு நடத்தினால் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்படலாம் என்பதால், தி.முக.வை சமரசப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வருகிறார். தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து, அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு அளித்து, மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படாமல் தவிர்க்கும்படி வலியுறுத்த உள்ளார்.

இதேபோல, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் காங்கரிஸ் ஈடுபட்டுள்ளது.
-பசுமை நாயகன்