தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா 3 முக்கிய அறிவிப்புகளை
வெளியிட்டார். சட்ட பேரவை விதி எண் 110ன் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர்,
சத்துணவு திட்டத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில்
பலவகை சோறுகளும் முட்டை மசாலாக்களும் அறிமுக படுத்தப்படும் என்று கூறினார்.
மற்றொரு அறிக்கையில் முதல்வர் இயற்கை வேளாண் பொருட்களான இளநீர்,
சீயக்காய், பருத்தி ஆகியவற்றை மக்களிடம் பிரபலப்படுத்தி அவற்றின் மருத்துவ
தன்மைகளை உணரசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு
நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றார்.
மேலும் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இப்போது
வருடத்திற்கு அதிகபட்சமாக 1லட்சத்து 50ஆயிரம் ரூபாய் அளவிலான மருத்துவ
சிகிச்சை மேற்கொள்ளப்படுவதை சுட்டிக்காட்டினார். ஆனால் கல்லீரல், சிறுநீரக
மற்று அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை போன்றவறிற்கு, அதிகமாக செலவு
ஏற்படுவதாகவும், இதனை ஏழை எளிய மக்களால் கொடுக்கமுடிவதில்லை என்பதால் அரசே
அந்த செலவை ஏற்றுக்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.
அரசு மருத்துவமனைகளில், சுகாதார பணிகளை மேம்படுத்துவத்ஜற்காக 4ஆயிரம்
பல் நோக்கு மருத்துவ பணியாளர்களும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்
பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றால் முதல்வர்.
-பசுமை நாயகன்