பிகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் மத்திய
அரசு பாரபட்சம் காட்டுவதாக அம்மாநிலமுதலமைச்சர் நிதிஷ்குமார் குற்றம்
சாட்டியுள்ளார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிகார் பேரணி என்கிற பெயரில் பாட்னாவில்
பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய
நிதிஷ்குமார், தற்போதைய சூழலில், இதர மாநிலங்களைப் போன்ற வளர்ச்சியை பிகார்
எட்ட சுமார் 20 ஆண்டுகள் பிடிக்கும் என குறிப்பிட்டார். பிகதாருக்கு
சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என அவர் திட்டவட்டமாக
தெரிவித்தார்.
ஆகவே வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க
வேண்டும் என்றும், அதற்கான தகுதி பிகார் மாநிலத்திற்கு இருப்பதாகவும்
நிதிஷ்குமார் கூறினார்.
-பசுமை நாயகன்