காவிரி விவகாரத்தில் தண்ணீர் தேவை குறித்து, தமிழகமும், கர்நாடகாவும் உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளன.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடும் விவகாரத்தில் இருமாநில
முதலமைச்சர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என
உச்சநீதிமன்றம் கடந்த 26ம் தேதி தெரிவித்தது.
இதையடுத்து , வியாழக்கிழமை அன்று தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் சந்திப்பு நடந்தது.
இதையடுத்து , வியாழக்கிழமை அன்று தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் சந்திப்பு நடந்தது.

இதனால் டெல்டா பாசன விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிகே.ஜெயின், மதன் பி லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் காவிரி விவகார வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெங்களூரில் கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார்.
தமிழகத்தில் சம்பா பயிர்களை காப்பாற்ற 39 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை குறைந்தபட்சம் 30 டிஎம்சி
தண்ணீர் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில்,
தங்களுக்கு 78 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாக கர்நாடகா தரப்பில் ஆஜரான
வழக்கறிஞர் கூறினார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள்,
தமிழக அரசும், கர்நாடக அரசும், தங்களுக்கான தண்ணீர் தேவை குறித்து இன்று
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.
இதன்படி, இரு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளன.
-பசுமை நாயகன்