மணிப்பூர் மாநிலத்தின் ‘இரும்புப் பெண்’ என்றழைக்கப்படும் ஐரோம்
ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இன்றுடன் 12 ஆண்டுகள்
நிறைவடைகிறன.
கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி இம்பால் விமான நிலையத்திற்கு
அருகே அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரால் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனை கண்டித்து மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து
செய்ய கோரி கடந்த 2000ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
அவர் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாட்டி அவரை கைது செய்து கட்டாயமாக
சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சமூக அமைப்புகள் இணைந்து
அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி
ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.