சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. வணிக
வளாகத்தில் இருந்த ரீகல் ஷூ கடையில் இருந்து தான் தீ பிடித்துள்ளது. தீ
விபத்து ஏற்பட்டவுடன் வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும்
முழுமையாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து பணியாளர்களும்
வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்தன.
தீ விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதியில் கூட்டம் சேர்ந்ததால் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.
-பசுமை நாயகன்