ரயில் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அமைச்சர்
பவன்குமார் பன்சால் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.ரயில் கட்டணத்தை
உயர்த்தாவிட்டால், ரயில்வேயை நடத்துவது கடினமாகிவிடும் என்றும் பன்சல்
தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டணத்தை உயர்த்துவது தங்களது இலக்கு அல்ல என்றும்,
பாதுகாப்பான, சிறப்பான ரயில் சேவை அளிப்பதே இலக்கு எனவும் அவர்
கூறியுள்ளார். இருப்பினும், ரயில் கட்டண உயர்வு குறித்து விரிவான ஆலோசனை
நடத்திய பின்னரே முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பவன்குமார் பன்சால்
தெரிவித்தார். கடந்த அக்டோபர் 28-ம் தேதி, ரயில்வே அமைச்சராக பன்சால்
பொறுப்பேற்றார்.
ஏற்கனவே, ரயில் கட்டண உயர்வு அவசியம் என்றும் அவர் கருத்து
தெரிவித்துள்ளார் என்பதால் விரைவியில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு
வெளியாகலாம் என கூறப்படுகிறது.