கூடங்குளம் அணு உலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்களை
கோலார் தங்கச் சுரங்கங்களில் புதைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு
கூறியுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி, அணு
கழிவுகளை நாட்டின் எந்த பகுதியிலும் கொட்டும் திட்டம் இல்லை என்று
கூறியுள்ளார். இது குறித்து அணு சக்தி கழகத்தின் தலைவர் கே.சி.புரோஹித்தும்
கோலார் சுரங்கத்தில் அணு கழிவுகள் புதைக்கும் திட்டம் இல்லை என்று
கூறியுள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார்.
இதனிடையே கோலார் சுரங்கத்தில் அணு கழிவுகளை புதைக்க அனுமதிக்க மாட்டோம்
என்று கர்நாடக மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். இப்பிரச்னை
குறித்து கோலார் பகுதி மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் கூடங்குளம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அணு
கழிவுகள் கோலார் தங்கசுரங்கத்தில் புதைக்கப்படும் என்று மத்திய அரசின்
வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமன் தெரிவித்தார்.
-பசுமை நாயகன்