அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றிபெற்றதை அவரது
ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஒபாமாவின் தலைமை அலுவலகம்
அமைந்துள்ள சிகாகோ நகரில் கூடிய ஜனநாயக கட்சி தொண்டர்கள், ஆடிப்பாடி
கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் அமெரிக்கர்கள் ஒருவருகொருவர்
கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். ஒபாமா படம் பொறித்த
முகமூடிகளை அணிந்தும் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வாஷிங்டன்
வெள்ளை மாளிகை முன்பும் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தோடுவதை பார்க்க
முடிகிறது.
-பசுமை நாயகன்