வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை விற்பனை வர்த்தகத்தில் கால்
பதிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 125 கோடி ரூபாய் செலவழித்துள்ளது
தெரியவந்துள்ளது
பன்னாட்டு சில்லறை வர்த்தக ஜாம்பவானான வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில்
தன் வர்த்தகத்தை தொடங்குவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தங்களுக்கு
சாதகமான கருத்தை உருவாக்குவதற்காகவும் இது குறித்து நாடாளுமன்றத்தில்
விவாதிப்பதற்காகவும் வால்மார்ட் நிறுவனம் இவ்வளவு தொகையை செலவழித்துள்ளதாக
கூறப்படுகிறது.
அமெரிக்க செனட்டில் வால்மார்ட் நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த
தகவல் இடம் பெற்றுள்ளது. அமெரிக்க தொழில் நிறுவனங்கள் நாடாளுமன்ற
உறுப்பினர்களிடம் தங்களுக்கு சாதகமாக கருத்தை உருவாக்க ’லாபியிங்’ என்ற
முறையை கையாள்கின்றன. இது அமெரிக்காவில் சட்டபூர்வமான நடைமுறையாகும்.
ஆனால் இதற்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்ற தகவலை அரசிடம்
நிறுவனங்கள் தெரிவித்துவிடவேண்டும். இந்தியாவின் 25 லட்சம் கோடி ரூபாய்
மதிப்புள்ள சில்லறை விற்பனை சந்தையில் நுழைய வால்மார்ட் கடந்த 4 ஆண்டுகளாக
தீவிரமாக போராடி வந்துள்ளது.
எனினும் இந்தியாவில் அரசியல் ரீதியாக எழுந்த எதிர்ப்புகள் காரணமாக இது
தாமதமாகி வந்தது. இப்போது பலத்த எதிர்ப்புக்கிடையில் சில்லறை வர்த்தகத்தில்
அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கிடைத்துள்ள
-பசுமை நாயகன்